மும்பை: சச்சின், கோலி சதம் அடிப்பதை பார்த்திருப்பதை போன்று, பெட்ரோல்,டீசல் விலை 100 ரூபாயை எட்டுவதை பார்க்க இருக்கிறோம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாள்தோறும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை  கண்டுள்ளது.

தொடரும் இந்த விலையேற்றத்தை கண்டித்துள்ள பல மாநில அரசுகள்,  மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந் நிலையில், கிரிக்கெட்டில் சச்சின், கோலி சதம் அடிப்பதை பார்த்திருப்பதை போன்று, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை எட்டுவதை பார்க்கிறோம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி சதம் அடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை சதம் அடிப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம் என்று கூறி உள்ளார்.