வைகோ – சீமான்

சாதி ரீதியாக தன்னைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்ததாவது:

“கடந்த எட்டு ஆண்டுகளாக என்னை தமிழன் அல்ல என்றும், தெலுங்கன் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான். அவரது ஆட்கள் இப்படி குறிப்பிட்டு கீழ்த்தரமான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் பொறுத்துக்கொண்டிருந்தேன்.

அவர்கள், “பெரியார் என்ன செய்தான், அண்ணா என்ன செய்தான்” என்றும் பேசிவருகிறார்கள். மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

திரைத்துறையில் உள்ள சிலர் என்னிடம், “பெரியாரை காலி செய்துவிட்டால், வைகோவை காலி செய்துவிடலாம் என்று சீமான் திட்டமிட்டுகிறார்” என்றனர்.

விடுதலைப்புலிகள் சின்னத்தை பிரபகாரன் உயிரோடு இல்லை என்று நினைத்துக்கொண்டு தனது கட்சியாக சீமான் வைத்துக்கொண்டிருக்கிறார்.

இவர் பிரபாகரனை சந்தித்ததே சில நிமிடங்கள்தான். ஆனால் ஆமைக்கறி, சப்பிட்டேன், போர்ப் பயிற்சி எடுத்தேன்” என்றெல்லாம் பொய் சொல்லி வருகிறார் சீமான்” என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.