இயக்குநர் கவுதமன் மீது காவல்துறை தாக்குதல்! சீமான் கண்டனம்!

Must read

சென்னை:

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கவுதமன் மீது போலீசார் கடுமையான தடியடி நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் ஆர்யா, இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் கவுதமன் ஆகியோர் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் சரமாரி தடியடி நடத்தினர். குறிப்பாக இயக்குநர் கவுதமனை போலீசார் விரட்டி விரட்டி தாக்கினர்.

காவல்துறையினரின் இந்தத் தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அறவழியில் போராடியவர்கள் மீது அநாகரிகமாக தடியடி நடத்தியதாக காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான்,  ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி பெற்றுத்தரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article