சென்னை
நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்த செய்தியாளர்கள் கேள்விகளுக்குச் சீமான் பதில் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தன்னை திருமண ஆசை காட்டி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இது மிகவும் பரபரப்பான சூழலில் அவர் திடீரென தனது புகாரை திரும்ப பெற்றார். இந்நிலையில் இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
செய்தியாளர்கள் அவரிடம், நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக கூறியது பற்றிக் கேட்டனர். சீமான் இதற்குப் பதில் அளித்துள்ளார்.
சீமான்,
“விஜயலட்சுமி நிறைய பொய்கள் சொல்லும்போது இதையும் ஒரு பொய்யாகக் கூறிச் சென்றுள்ளார். 2010க்கு பிறகு நான் விஜயலட்சுமியிடம் பேசியது கிடையாது. 13 ஆண்டுகள் ஆன பிறகு அவர் சும்மா சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
எல்லாவற்றையும் விஜயலட்சுமி பதிவு செய்து வருகிறாரே, நான் பேசியதாகக் கூறுவதை ஏன் பதிவிடவில்லை? என்னுடைய சரித்திரத்திலேயே சமரசம் என்பது கிடையாது. எனக்கு அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது”
என்று பதில் அளித்துள்ளார்.