ஸ்ரீநகர்
ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக்குக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஜம்மு காஷ்மீர் அரசால் குறைக்கப்பட்டுள்ளது.
ஹுரியத் தலைவர் ஃபாருக்குக்கு ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பால் ஆபத்து ஏற்படக்கூட்டும் என அவருக்கு Z செக்யூரிட்டி வழங்கப்பட்டுள்ளது. அவர் தேவை இல்லை என மறுத்த போதிலும், இது அரசின் உத்தரவு, அதை மீறக்கூடாது என அவருக்கு அறிவுருத்தி பாதுகாவலர்களை ஜம்மு காஷ்மீர் அரசு நியமித்தது.
அவருக்கு அளிக்க்ப்பட்ட 16 காவலர்களில் 8 பேரை அரசு அவசர பணிக்காக அழைத்துக் கொண்டது. ஒரு வாரத்துக்கு மேலாகியும் அவர்கள் திருப்பி அனுப்பப்படவில்லை.
போலீஸ் அதிகாரி முகமது அயூப் கொல்லப்பட்ட இரு வாரத்துக்குள் ஃபாரூக்கின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. முகமது அயூப் கொல்லப்பட்ட மசூதியில் தான் ஃபாரூக் தனது உரைகளை நிகழ்த்துவது வழக்கம். இவை இரண்டும் சம்மந்தம் இல்லாத விஷயங்கள் என அரசால் தெரிவிக்கப்பட்டாலும் சம்மந்தம் இருக்கலாம் என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.