கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும் அளவுக்கு நிலைமை சீர் கெடவில்லை என மார்க்ஸிஸ்ட் கம்யூனிச்ட் கட்சியின் பிமன் போஸ் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கலவரம் தொடர்ந்து நடைபெறுகிறது.   பல இடங்களில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.  இதனால் பாஜக மம்தாவால் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை எனவும் உடண்டியாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து  மார்க்ஸிஸ்ட் கம்யூனிச்ட் கட்சியின் பிமன் போஸ் கூறியதாவது :

”மாநிலத்தின் சில பகுதிகளில் அதாவது வடக்கு 24 பாரகனாஸ் மாவட்டத்தில் அமைதியை நிலை நாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது உண்மைதான்.   ஆனால் அதே சமயம் ஜனாதிபதி ஆட்சி வரும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை.  இது போல கோரிக்கை விடுப்பது பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் நடத்தும் நாடகங்களில் ஒன்று,   மாநிலத்தில் உள்ள நிலைமையப் பற்றி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி அரசு விவாதிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்