டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில், அவர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. அவரது கைதை உறுதி செய்யும் வகையில், அவரது வீட்டை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தலைநகர் டெல்லியில்,. கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாககெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக டெல்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவாலும் கைது செய்யப்படலாம் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதி செய்யும் வகையில், அவரது வீட்டை சுற்றி அதிகாலை முதலே காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
இதுகுறித்து கூறிய ஆம்ஆத்மி நிர்வாகிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க கெஜ்ரிவால் தயாராக இருக்கிறார். ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதே அவர்களின் நோக்கம் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
3வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால்! கைது செய்யப்படுவாரா?