சென்னை

ன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இன்று காணும் பொங்கலையொட்டி நகர் முழுவதும் உள்ள பல இடங்களுக்குப் பொதுமக்கள் செல்வது வழக்கமாகும்.  எனவே சென்னையில் மொத்தம் 17 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக சென்னை மெரினா கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் வருகை தருவார்கள் என்பதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மெரினா கடற்கரையில் இரவு 10 மணிக்கு மேல் அனுமதி இல்லை எனவும், நீரில் இறங்கிக் குளிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் காணாமல் போவதை தவிர்ப்பதற்காக குழந்தைகளின் கைகளில் ‘டேக்’ ஒட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பதற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.