“அவர்கள்தான்,

ரஜினியின்

  தர்பாரை – ஆட்சியை,

திட்டமிட்டு நடத்துவார்கள்…!”

சூப்பர் லீடராக உருவாகியுள்ள ரஜினியின் அரசியல் பயணம்,
என்ன மாதிரியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது என்பதை, இந்தத் தொடரின் முதல் பாகத்திலேயே, அதாவது… ஆட்சித்  தலைமை – கட்சித் தலைமை என்ற  ‘டபுள் டெக்கர்’ ஐடியாவை, ‘சூப்பர் லீடர்’ ரஜினி 12/03/2020 அன்று, லீலா பேலஸ் ஓட்டல் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அறிவிப்பு செய்வதற்கு 13 நாட்களுக்கு முன்பே,  அதாவது – 28/2/2020 காலை 10.19க்கே, மிகவும் தெளிவாக பதிவாகி உள்ளது.

◆ பத்திரிகை.காம் முதல் தொடரைப் பாருங்கள்

◆ ‘அவர்கள்தான்’ என்று நாம் குறிப்பிட்டிருப்பது,  அசப்பில் லேசாக – காமராஜர் போலவே இருக்கும் ஓடந்துறை பஞ்சாயத்து தலைவர் ஆர். சண்முகம்,  அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மற்றும் சில அண்ணாமலைகளை கவனத்தில் வைத்துதான்!

◆ கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரமடை ஒன்றியத்தில் உள்ள 17 கிராமப் பஞ்சாயத்துக்களில் ஒன்றான, சற்றேறக்குறைய பத்தாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஓடந்துறை என்கிற பஞ்சாயத்தின் தலைவர்தான்,  ஆர். சண்முகம் !

◆ இவரது சாதனைகளைப் பாராட்டிய ‘யூனிவர்சிட்டி ஆஃப் டொரொன்டோ’ என்கிற கனடாவில் உள்ள, உலகப் புகழ் பெற்ற யூனிவர்சிட்டி, இவரை அழைத்து, 2019 ஜூன் 24, 25, 26 தேதிகளில் நடந்த மூன்று நாள் ‘Smart Villages Conference -2019’ உலக மாநாட்டில் ‘Smart Villages ‘ பற்றிப் பேச வைத்தது !

ஒடந்துறை சண்முகம். வீடியோ இணைப்பு… காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

‘பாலம்’ கல்யாணசுந்தரம் வீடியோ இணைப்பு காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

நகரத்துக்கு இணையான வசதிகள் கிராமத்திலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,  PROVIDE AMINITIES IN RURAL AREA (PURA) என்ற திட்டத்தை, மக்கள் ஜனாதிபதியான ஏ.பி.கே அப்துல்கலாம், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்! அந்த திட்டம், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான கிராமங்களை வளப்படுத்தும் அற்புதமான திட்டம்!

◆ அந்தத் திட்டத்தை, உள்வாங்கி, வெற்றிகரமாக அமல் செய்து, தன்னுடைய ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்தை உலகமே வியந்து பாராட்டும்படி செய்தவர், ஆர்.சண்முகம்!

◆ உலக வங்கியின் (The World Bank) ட்ரஸ்ட் பண்டு ஆப்ரேஷன்ஸ் தலைவர் Mr. David Potten, ஓடந்துறை பஞ்சாயத்தை 2005 ஜூலை 3-ம் தேதியன்று நேரில் பார்வையிட்டு, 2005 ஆகஸ்ட் 1-ம் தேதி, ஆர். சண்முகத்தை பாராட்டி, கடிதம் எழுதியுள்ளார்!

◆ வல்லரசு நாடுகளான ஜெர்மன், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் வளர்ந்த நாடுகளான நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட 43-க்கும் மேலான  நாடுகளின் பிரதிநிதிகள், ஓடந்துறை பஞ்சாயத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பார்த்து வியந்துள்ளனர்! 65 வயது நிரம்பிய ஆர் சண்முகத்தையும் அவரது ஊழலற்ற நிர்வாகத் திறமையை, தங்களது நாடுகளில் அமல் செய்யப் போவதாகக் கூறியுள்ளனர்!

◆ ஓடந்துறை பஞ்சாயத்துத் தலைவர் ஆர்.சண்முகத்தின் தொடர்பில் கடந்த 3 மாத காலமாக  நான் இருந்து வருகிறேன்!

◆ “நகரத்தில்கூட சாத்தியப்படாத பல திட்டங்களை ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் நீங்கள் எப்படி சாத்தியப்படுத்தினீர்கள்?” என்று மொபைலில் தொடர்பு கொண்டு, ஓடந்துறை பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டேன்!

◆ அவர் ரொம்பவும் சாதாரணமாக சொன்னார்:  “இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லீங்க. ‘லஞ்சத்திற்கு வாய்ப்பளிக்காத நிர்வாகம், முன்னேற்றத்தை உருவாக்கும்’…” என்று, ஐந்து வார்த்தைகளில் ‘மக்கள் தலைவர்’ காமராஜ் போல சுருக்கமாக சொன்னார்!

◆ இல்வாழ்க்கையின் பண்பு பற்றி சொல்லவந்த திருவள்ளுவருக்குக் கூட, ஏழு வார்த்தைகள் தேவைப்பட்டது!

◆ஆனால், ஓடந்துறை பஞ்சாயத்துத் தலைவர் ஆர். சண்முகம், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஐந்து வார்த்தைகளில் வழி சொன்னார்!

◆ 1996 முதல் 2006 வரை ஆர்.சண்முகமும் 2006 முதல் 2016 வரை அவரது மனைவியும் ஓடந்துறை பஞ்சாயத்தின் தலைவராக இருந்தனர்!

◆ ஆர்.சண்முகம், மக்கள் ஜனாதிபதியின் பாராட்டுதலையும், விருதையும் பெற்றவர்! தமிழக முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா இருவரது பாராட்டையும் விருதையும் பெற்றவர்!

◆ இவரைப் பாராட்டி, உலக நாடுகளின் தலைவர்கள் எழுதிய கடிதங்களையும் பாராட்டுகளையும், லஞ்சம்-ஊழலற்ற நிர்வாகத் திறமையால் ஓடந்துறை கிராமம் – நகரங்களுக்கு இணையாக – ஒருபடி மேலாக ஜொலிப்பது பற்றியும் புகைப்பட ஆதாரங்களுடன் தொகுக்க, 200 பக்கங்கள்கூட போதாது !

◆ இவரைப்பற்றி, YouTubeல் வியப்பான செய்திகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கிறது !

◆ இவற்றைத் தொகுத்தால், 5 மணி நேரம் இடையறாமல் பார்த்து, மகிழ்ச்சியடையலாம் ! வியந்துபோகலாம் !

◆ ஊழல் மலிந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளை தூக்கிக் கடாச நினைக்கும் ரஜினிகாந்த், லஞ்சம் வாங்காத ஊழல் செய்யாத, உலகமே திரும்பிப்பார்க்கும்,  ஓடந்துறை பஞ்சாயத்துத் தலைவர் ஆர். சண்முகத்தை கடந்து மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில் வைத்துள்ளார், ரஜினி.

◆  நகரங்களில் கூட இல்லாத பல வசதிகளை ரொம்ப பிரமாதமாக உங்களது பஞ்சாயத்தில் செய்ய முடிந்தது எப்படி? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள விரும்பி, ஓடந்துறை சண்முகத்தை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசினார் ரஜினி!

◆ சண்முகத்தை, கட்டித் தழுவி, பொன்னாடை சூட்டி மகிழ்ந்தார், ரஜினி! இந்த சந்திப்பு நடந்து பல ஆண்டுகள் ஆகிறது!

◆  ஓடந்துறை சண்முகத்தை ரஜினிக்கு அறிமுகம் செய்து வைத்தவர், மக்கள் ஜனாதிபதியான அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்! பொன்ராஜ், ‘அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்!

◆ பொன்ராஜ்தான், கனடாவின் டொரன்டோ பல்கலைக் கழகத்திற்கும் SMART VILLAGES  மாநாட்டுக்கும் ஓடந்துறை சண்முகத்தைச் அழைத்துச் சென்றவர்!

◆  லஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சியை அமைக்கும் நோக்கில்தான், 2017 டிசம்பர் முதல், பல துறை வல்லுனர்கள், அறிஞர்களோடு கலந்து பேசி வருகிறார், ரஜினி!

◆   அந்தப் பட்டியலில் உள்ளவர்களின் பெயரை சொன்னாலே, அவர்களது சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே, மக்கள் மொத்தபேரும் ‘சபாஷ்’ என்று சொல்வார்கள்! ரஜினியின் அரசியல் பயணம் வெற்றியடையும்!

◆  ரஜினிக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? அவரால் ஆட்சி நடத்த முடியுமா? என்றெல்லாம் கொக்கி மாட்டப்படுகிறது!

◆  ரஜினிக்கு எல்லாமே தெரியும்!

1. காந்திஜியின் செயலாளர் கல்யாணசுந்தரம்
2. ‘பாலம்’ கல்யாணசுந்தரம்
3. மக்கள் ஜனாதிபதியான அப்தூல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி
4. வளர்ந்த உலக நாடுகளின் பாராட்டுக்களைப் பெற்ற, ஓடந்துறை ஆர். சண்முகம் உள்ளிட்ட உயர்ந்த மனிதர்களை, தனது தொடர்பில் வைத்திருக்கிறார் ரஜினி!

◆ அவரவருக்கு உரிய பொறுப்புகளை கொடுத்து ஆட்சியில், கட்சியில் முன்னிலைப்படுத்துவார், ரஜினி!

◆ ‘தகதகாய’ வெற்றிகளை, லேசாகக் குவிப்பார், ரஜினி !

●