விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 3 நேற்று இரவோடு முடிந்தது. முகேன் ராவ், டைடில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 7 கோடிக்கும் மேலான வாக்குகள் கிடைத்ததாலயே அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டிக்கு 5 கோடிக்கு மேலான வாக்குகள் கிடைத்திருக்கிறது. மொத்தமாக 20 கோடி மக்கள் வாக்களித்ததாக கூறப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க கதை, திரைக்கதை எழுதி இயக்கப்படும் சீரியல் போல தான், டி.ஆர்.பி ரேட்டிங் தான் அதற்கு காரணம் என அனைவராலும் கூறப்பட்டுவந்தது .
இந்நிலையில் முகேனை வெற்றியாளராக அறிவித்தால், பிக் பாஸ் நிகழ்ச்சி வெளிநாடுகளிலும் பிரபலமாகும் என்பதால் தான், அவரை போட்டியாளராக அறிவித்திருக்கிறார்கள். மக்களின் இறுதி வாக்குகள் மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படவில்லை என பரவலாக குற்றம்சாட்டி வருகின்றனர் .