நாகை

நாகை மாவட்டத்தில் மீனவர்களிடம் சிக்கிய இரண்டாம் உலகப் போர் குண்டு, வெடிகுண்டு நிபுணர்களின் மேற்பார்வையில் தகுந்த பாதுகாப்புடன் வெடிக்கச் செய்யப்பட்டது.

 

சீர்காழியை அடுத்துள்ள திருமுல்லை வாசலில் இம்மாதம் 15 ஆம் தேதி மீனவர்களின் வலையில் 1 மீட்டர் உயரத்தில் ராக்கெட் லாஞ்சர் வடிவிலான பொருள் சிக்கியது.

மீனவர்கள் அளித்த தகவலின்படி, கியூபிரிவு போலிசார் அதனை பாதுகாப்பாக மண்ணில் புதைத்து வைத்தனர்.

இந்நிலையில் வெடிகுண்டு நிபுணர் குழு அதனை ஆய்வு செய்து இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய குண்டு எனத் தெரிவித்தனர்.

பின்னர் அதனை மிகவும் பாதுகாப்பாக மண்ணில் புதைத்து வெடிக்கச் செய்தனர். 300 மீட்டர் உயரத்திற்கு அந்த குண்டு வெடித்துச் சிதறியது.

நீர்மூழ்கிக் கப்பல் அல்லது விமானத்திலிருந்து எதிரிகளின் இலக்கை தாக்க ராக்கெட் லாஞ்சர்கள் இரண்டாம் உலகப் போரில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.