சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று மதியம் ஆஜராக தலைமைநீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை வீசி வருகிறது. இதனால் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 7 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,564 பேரும், செங்கல்பட்டில் 772 பேரும், கோவையில் 540 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 22 பேரும், பெரம்பலூரில் 2 பேரும் பாதிப்புக்கு ஆளா. இதுவரையில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 663 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 54 ஆயிரத்து 315 பேர் உள்ளனர்.
இதுதொடர்பாக இன்று அரியர் வழக்கின் விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர் விஜய்நாராயணிடம் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தால் பின்பற்றப்பட வேண்டிய ஆலோசனை சுகாதாரத்துறைக்கு உள்ளதா என்பதை சென்னை உயர்நீதிமன்றம் விரும்புகிறது என்றார்ல.
இதற்குபதில் அளித்த அரசு வழக்கறிஞர், கோரோனா தொற்றின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி வருவதாக தெரிவித்தவர், மைக்ரன்ட் கொரோனா ( பிறழ்வுகள்) க வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதிகாரிகளால் கணிக்க முடியவில்லை என்றார். இந்த அளவிலான தீவிர பரவலுக்கு காரணம் சட்டமன்ற தேர்தல் இல்லை என்றவர், தேர்தல் நடத்தப்பட பல மாநிலங்களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து இருப்பதாக கூறினார்.
மேலும், தமிழக அரசு தகவல் போதிய அளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டம் இருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று பிற்பகல் தலைமை நீதிபதியை சந்திக்க சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணனிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.