சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்புநிலை திரும்புவதால், அது இரண்டாம் சுற்று கொரோனா பரவலுக்கு வழிவகுக்கலாம் என உலக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். மேலும், பயண தடைகள் நீக்கப்பட்டு, தயாரிப்பு மற்றும் உற்பத்தி பணிகளும் துவங்கவுள்ளதால், ஹூபாய் மாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் துவங்கியுள்ளதற்கு உலகநாடுகள் சாட்சியாகியுள்ளன.
ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் தீவிரப்பரவல் கட்டுக்குள் வந்ததால், மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. படம் – நன்றி: சைன் நோவெல் / சிபா / ஷட்டர்ஸ்டாக்
பல மாதங்களுக்கு பின் முதல்முறையாக, கொரோனா வைரஸ் தொருதல் மற்றும் பரவுதலில் மையமாக இருந்த ஹூபே மாகாணம், ஒரு நல்ல காரணத்திற்காக உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடுமையான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக முடக்கப்பட்டு 60 நாட்களுக்கு பிறகு, COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நடைமுறையில் பூஜ்ஜியத்தை எட்டியதால், கடந்த வாரம் அதிகாரிகள் ஹூபே மாகாணத்தின் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளனர். இப்போது விஞ்ஞானிகள், வல்லுனர்கள் மற்றும் உலகின் பிற நாடுகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கை தளர்த்துவது, தினசரி புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஆரம்ப நிலையில் அச்சம் கொள்ளத்தக்க சூழ்நிலை ஏதும் கண்டறியப்படவில்லை. “முடக்கத்தை தளர்த்துவதற்கான நேரம் இதுவாக இருந்தாலும், சாத்தியமான இரண்டாவது சுற்று கொரோனா தொற்றுக் குறித்து நாங்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்,” என்று சீனாவின் நிலைமையைக் கவனித்து வரும் ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் பென் கோவ்லிங் கூறுகிறார். இரண்டாவது சுற்று கொரோனா தாக்குதல் ஏற்படுமானால், ஏப்ரல் இறுதிக்குள் அது வெளிப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம் எனக் கோவ்லிங் கூறினார்.
ஹூபேயில் – மற்றும் சீனா முழுவதும் – இந்த சூழ்நிலை எவ்வாறு கையாளப்படுகிறது என்பது, பல ஐரோப்பிய நாடுகளுக்கும், சில அமெரிக்க மாநிலங்களுக்கும் பொருந்தும். ஏனெனில், அவர்களும் எல்லைகளுக்குள் மற்றும் எல்லை தாண்டிய பயணத்தை தடைசெய்துள்ளன. பெரும்பாலான வணிகங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடிவிட்டன. மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. , மக்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில், வீட்டிலேயே இருக்கும்படி கூறின. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வு கடுமையான COVID-19 நோய்த்தொற்று உள்ளவர்களின் விகிதத்தை, ஒரு நாட்டின் மருத்துவ கட்டமைப்புக்குள் நிர்வகிக்கக்கூடிய அளவில் வைத்திருக்க அடுத்த இரண்டு ஆண்டுகள் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுதல் மற்றும் நாட்டில் சமூக இடைவெளியைக் கடுமையாகக் கடைபிடித்தல் போன்ற தொலைநோக்கு நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்று பரிந்துரைத்துள்ளது. அதே சமயம், கடும் நடவடிக்கைகளை தளர்த்தி அதே சமயம் COVID-19 பறவை கட்டுக்குள் வைக்கமுடியும் என சீனாவால் காட்ட முடிந்தால், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நீடித்த கடுமையான கட்டுப்பாடுகள் அவசியமில்லை என்றாகிவிடும்.
விரிவான பரிசோதனைகள்
தற்போது, சீன மாகாணங்கள் இரண்டாம் சுற்று கொரோனா பரவல் தீவிரமடைதளைக் தடுக்கும் வகையில், புதிய பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய விரிவான பரிசோதனைகள் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டறியும் முறைகளை பயன்படுத்தி வருகின்றன. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் முறைகளையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க, தனது நாட்டு குடிமக்களை தவிர பிற அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு திரும்பும் குடிமக்களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனை ஆய்வு செய்த வல்லுனர்கள் கூறுகையில், சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், சீனாவின் நிலைமை வேறுபட்டது. சீன அரசு, சமூக இடைவெளியை பின்பற்றுதல், துரித பரிசோதனைகள் போன்ற தீவிர நடிவடிக்கைகளினால், கொரோனா பரவலை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, சாத்தியமான தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பவர்களை பதிவு செய்து பரிசோதித்தனர். இந்த யுக்தி கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்க உதவியது. ஆனால் இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற பிற நாடுகள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் செலுத்திய கவனத்தை, துரித மற்றும் தீவிர பரிசோதனைகளிலும், தொற்று ஏற்பட சாத்தியமான தொடர்புகளைக் கண்டறிவதிலும் செலுத்தவில்லை. எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்போது அவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கோவ்லிங் கூறினார்.
ஆனால், சீனாவில் ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டால், மக்களிடையே வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. ஏனெனில் இன்னும் கண்டறியப்படாத, அறிகுறியற்ற நோயாளிகள் மக்களிடையே இருக்கலாம்” என ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சியாளரான கேப்ரியல் லியுங் கூறுகிறார். எனவே “இதுவரைக்குமான ஒரே ஒரு முடக்குதல் மட்டும் போதுமானது அல்ல, வைரஸை கட்டுப்படுத்த இன்னும் கடுமையான முயற்சிகள் தேவைப்படலாம்” என்று அவர் கூறுனார். மேலும் கூறியதாவது, “ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்தைப் சரிவில் இருந்து பாதுகாப்பதற்குமான இடையில் இருக்கும் இடைவெளி மற்றும் அவசியம், உணர்வுபூர்வமான நல்வாழ்வு ஆகியவை அரசை எதிர்வரும் எதிர்காலத்தில் வருத்தபட வைக்கும்.”
தளர்த்தப்படும் கட்டுபாடுகள்
ஹூபே மாகாணம்: சுமார் 60 மில்லியன் மக்கள் வசிக்கும் இடம் – இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனினும், கட்டுபாடுகள் தளர்த்தப்பட துவங்கியிருப்பதால், மக்கள் மெதுவாக வீடுகளை விட்டு வெளியேறி வேலைக்குத் திரும்புகிறார்கள். தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ஆனால், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மட்டும் “தொற்றுநோய் கட்டுப்பாட்டு நிலைமை பற்றிய விஞ்ஞான மதிப்பீடுகள்” நிலுவையில் உள்ளதால், இன்னும் மூடப்பட்டுள்ளன என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர். மாகாண தலைநகரான வுஹானுக்கு உள்ளேயும் வெளியேயுமான பயணம் ஏப்ரல் 8 வரை தடைசெய்யப்பட்டுள்ளது. அதுவரை, வைரஸ் தொற்று கண்டறியும் சோதனைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். மார்ச் 18 முதல், ஹூபேயில் ஒரே ஒரு புதிய நோயாளி மட்டும் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 17க்கு பிறகு, இந்த கட்டுரை எழுதப்படும் வரை (ஏப்ரல் 26) புதிய எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை. இருந்தாலும் ஹுபே உள்ளிட்ட பெய்ஜிங், குவாங்டாங், ஹெனன், ஹுனான், ஜெஜியாங் ஆகிய ஆறு சீன மாகாணங்களில் புதிய COVID-19 நோயாளிகள் சமீபத்தில் பதிவாக துவங்கியுள்ளனர். தளர்த்தப்பட்ட கட்டுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இங்கிலாந்து ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இந்த மாகாணங்களில் – கடுமையான கட்டுபாடுகளும், ஊரடங்குமே புதிய COVID-19 நோயாளிகள் எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு குறைக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் தொற்று நோய் ஆராய்ச்சியாளர்களான நீல் பெர்குசன் மற்றும் ஸ்டீவன் ரிலே தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதன்படி, பிப்ரவரி மாத பிற்பகுதியில் ஹூபே தவிர அனைத்து மாகாணங்களிலும், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் துவங்கப்பட்டன. இருந்தும் புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்துள்ளது. மேலும், மார்ச் மாதத்தில் ஹூபேயில் அனைத்து செயல்பாடுகளும் மீண்டும் தொடங்கப்பட்டது. அங்கும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதிலிருந்து, கடுமையான கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு மூலம் கடுமையான சமூக-இடைவெளியை கடைபிடிக்கும் கொள்கையை ஓரளவிற்கு வெற்றிகரமாக நிறைவேறி, வைரஸை வெளியேற்றியுள்ளனர்” என்று இந்த ஆய்வு முடிவாக அறிக்கையிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் வளர்ந்து வரும் நோய் ஆராய்ச்சியாளரான ஆண்ட்ரூ டாடெம் கூறுகையில், “இதுவரை, அனைத்தும் நன்றாகவே முடிந்துள்ளது.” என்றார். “ஆனால், இந்த கண்டுபிடிப்பு மற்றும் அறிக்கை முன்னெச்சரிகையுடன் அணுகப்பட வேண்டும்” என்றும் கூறினார். ஏனெனில் இங்கிலாந்தின் குழு ஆய்வு செய்த ஆறு பிராந்தியங்களிலும், ஜெஜியாங் மாகாணத்தைத் தவிர பாதி அளவிலான செயல்பாடுகள் மட்டும் துவக்கப்பட்டுள்ளது. எனவே, துவக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கும், பதிவு செய்யப்படும் புதிய கொரோனா நோயாளிகளுக்குமான எண்ணிக்கையின் இடையில் ஒரு இடைவெளி இருக்கலாம்” என்று விளக்கியுள்ளனர். எனவே, தற்போது அனைவரும் காத்திருந்த பார்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். அனைத்து செயல்பாடுகளும் முழு அளவில் இயல்பு நிலைக்கு திரும்பும்போது, நாம் கண்டறியும் முடிவுகள் எதிர்பாராத சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கக் கூடும்.“ என்று கூறினார்.
இரண்டாவது சுற்று
50% முதல் 70% வரையிலான மக்களில் கணிசமான பகுதியினர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இப்போது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருந்தால், இந்த வைரஸ் மீண்டும் தாக்குவது இயலாது” என்று லியுங் கூறுகிறார். ஆனால் சீனாவின் 81,000 நோயாளிகளில் பாதிக்கும் மேலான எண்ணிக்கை கொண்ட வுஹானில் கூட – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இப்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மொத்தமாகவே, 10%-க்கும் குறைவாகவே இருக்கும்” என்று அவர் குறிப்பிடுகிறார். “அதாவது தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியமுள்ள மக்கள் ஏராளமானோர் இன்னும் உள்ளனர். ஒருவேளை, தடுப்பூசி நோஎர்ப்பு கொண்ட மக்களின் விகிதத்தை அதிகரிக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தடுப்பூசிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, தற்போதைய இந்த எண்ணிக்கை ஒரு நிம்மதி பெருமூச்சு கூட விட அனுமதிக்காது,” என்று அவர் கூறினார்.
“கட்டுபாடுகளை தளர்த்துவதினால் விளையும் அபாயத்தை அறிய, ஹாங்காங்கில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாம் காண வேண்டும்” டாடெம் கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது, “ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸின் ஆரம்ப பரவல் தீவிர பரிசோதனை மற்றும் சாத்தியமான தொடர்புகளை அறிதல் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த வாரத்தில், மூன்று பிராந்தியங்களும் தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள் ஆவர். மேலும் அவர்களிடம் இருந்து தொற்றிய உள்ளூர் நோயாளிகளும் கண்டறியப்பட்டனர். தற்போது மூன்று பிராந்தியங்களும் இப்போது சர்வதேச பயணிகளை தற்காலிகமாக தடைசெய்துள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும் தனது குடிமக்களையும் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துகின்றன. எனவே, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் படிப்படியாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும், மிக நெருக்கமான தீவிர கண்காணிப்புடனும் தளர்த்தப்பட வேண்டும்,” என்று டேடெம் கூறுகிறார்.
சோதனை மற்றும் தொடர்புகளை அறிதல்
சீனா இன்னும் நாடு முழுவதும் விரிவான, தீவிரமான COVID-19 கண்காணிப்பை செயல்படுத்தி வருகிறது. மாகாணங்கள் அனைத்திலும், குடிமக்களுக்கு ஒரு QR குறியீட்டை வழங்கியுள்ளன. இது ஒரு வகை BARCODE ஆகும். இதை ஸ்கேன் செய்யும் போது அவர்கள் பற்றிய உடல்நலம், பயண விவரங்கள் என அனைத்தும் அறியலாம். ஒரு நபர் சீனாவில் பாதுகாப்பாகக் கருதப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தால் அல்லது வசித்தால், அல்லது நோய்க்கான தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு நோய் இல்லை என உறுதியானவராக இருந்தால் அவர்களுக்கு பாதுகப்பானவர் எனக் குறிக்கும் பச்சை நிற குறியீடு ஒதுக்கப்படுகிறது. அவர்கள் மாகாண எல்லைகளைக் கடக்க, மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய, சுரங்கப்பாதை மற்றும் ரயில்களில் சவாரி செய்ய அனுமதிக்கபாடுவார்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதைத் தடுப்பதுமட்டும் இன்றி, ஒரு புதிய நோயாளி கண்டறியப்பட்டால், அந்த நபரின் குறியீடை ஸ்கேன் செய்து அவரின் மொத்த பயண விவரங்களையும் கண்டறிந்து, அவர்கள் தொடர்பு கொண்ட நபர்களை அடையாளம் காண முடியும். கோவ்லிங் இதை ஒரு “மேம்பட்ட சோதனை மற்றும் தொடர்புகளை அறிதல் முறை” என்று அழைக்கிறார். இது சீனா பாதிக்கப்பட்டவர்களை முடிந்தவரை விரைவாக அடையாளம் காணவும், பின்னர் அவர்களை தனிமைப்படுத்தவும் வழிவகுக்கிறது.
இரண்டாவது சுற்று பரவல் ஏற்படாமல் தடுக்க இது மட்டும் போதுமானதா என்பது அனைவரும் முன்வைக்கும் பெரிய கேள்வி ஆகும். வுஹான் நகரத்தில் செய்த சோதனைகளின் எண்ணிக்கையைச் மற்ற நகரங்களும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அது புதிய சிக்கலாகவே இருக்கும்” என்று கோவ்லிங் கருதுகிறார். ஏனெனில் இது உச்சபட்ட எண்ணிக்கையாக, ஒரு நாளைக்கு 10,000 பரிசோதனைகளை எட்டியுள்ளது. “சோதனை மற்றும் தனிமைப்படுத்தலில் அதிக கவனம் செலுத்துவதில் ஆபத்து உள்ளது,” என்று அவர் கூறுகிறார், மேலும் சமூக-இடைவெளியைக் கடைப்பிடித்தல் என்பது இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதாக கூறுகிறார். சீன நகரங்கள் இவ்வளவு விரைவாக கட்டுபாடுகளை தளர்த்துவதில் இருக்கும் அபாயத்திற்கு அஞ்சுகின்றன. கடந்த 18 நாட்களாக திறக்கப்பட்டுள்ள ஷாங்காயில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் இடங்கள் மீண்டும் மூடப்பட்டன. சினிமா வளாகங்கள் மீண்டும் மூடப்பட்டன. இருந்தும், நகரில் சில விதிகளை தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் இனி குடியிருப்பு வளாகங்களை விட்டு வெளியேற பாஸ் தேவையில்லை. விநியோகப் பணியாளர்கள் இந்த பகுதிகளுக்குள் நுழைய முடியும். சில பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தையும் தளர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, போலீசார், ட்ரோன்கள் அல்லது ரோபோக்களை கண்காணிப்புக்கு உபயோகப்படுத்துகின்றனர்.
இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழியும் நாடுகளில் பெரும்பாலானவை சமூக-இடைவெளியைக் கடைபிடிக்கும் நடவடிக்கைகளையே நம்பியுள்ளன. அவர்கள் மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துகிறார்கள். சீனாவும் அந்த நடவடிக்கைகளை செயல்படுத்தியது, ஆனால் அதனுடன், புதிய மருத்துவமனைகளை கட்டி, விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டது. பின்னர், மக்களின் உடல்நிலை மற்றும் அறிகுறிகளை சோதிக்க வீடு வீடாகச் சென்றனர். அனைவரையும் சோதித்து, சிறு அறிகுறியைக் கொண்டவர்களையும், தொற்று என உறுதியானவர்களையும் தனிமைப்படுத்தினர். “இந்த கூடுதல் முயற்சி அவர்களுக்கு வைரஸை கட்டுப்படுத்த வழி ஏற்படுத்தியது” என்று கோவ்லிங் கூறுகிறார். “மக்கள் சீனாவைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக, அவர்கள் பயன்படுத்திய அதே வழியில் அல்ல,” என்று அவர் கூறி முடித்தார்.
தமிழில்: லயா