ரிசர்வ் வங்கி ஆளுநர் பணியினை நேசிப்பதாக ரகுராம் ராஜன் கூறினார். பா.ஜ.க.வில் சில சக்திகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நேரத்தில் அவர் தமக்கு இரண்டாம் வாய்ப்பு வழங்கப்படுவது அவசியம் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பணிக்காலமான மூன்றாண்டுகள் செப்டம்பரில் நிறைவு அடைவதையொட்டி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா என்று பொருளாதார நிபுணர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நீடிப்பது குறித்தும் சமீபத்தில் அருண் ஜெட்லிக்கும் அவருக்கும் நிலவும் நிலவி வரும் பனிப்போர் குறித்தும் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
நேற்று, சுப்ரமனியன் சாமி ரகுராம் ராஜன் சிக்காகோவிற்கே திரும்பி அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தகுதியான நபர் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். அதனையும் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், ரகுராம் ராஜனிடம், அவரது பணி நிட்டிப்பு செய்யப் படுவதற்கான வாய்ப்பு குறித்தும் , அதனைச் சுற்றி நிகழும் அரசியல் அழுத்தம் குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்படாவிட்டால் , தாங்கள் செய்ய நினைத்த பணி முழுமை ஆகாமல் போய்விடும் என எண்ணுகின்றீர்களா எனும் கேள்வியும் எழுப்பப் பட்டது. .அதற்கு பதில் அளித்த அவர், “இது ஒரு நல்ல கேள்வி. நான் என் பணியின் ஒவ்வொரு நொடியையும் விரும்புகின்றேன். செய்ய வேண்டியவை நிரைய உள்ளன” என்றார்.
சிக்காகோ வர்த்தகப்பள்ளியின் பேராசிரியர். தலைமை பொருளாதார நிபுணர் என அறியப்பட்ட ரகுராம் ராஜன் தற்பொழுது இங்கிலாந்டில் விரிவுரை ஆற்றுவதற்காக சென்றுள்ளார்.
மத்திய வங்கியில் தனக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து எந்தத் தகவலும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
கடனுக்கான வட்டி விகிதத்தை 7.25 % இருந்து 8% ஆக உயர்த்தினார். மத்திய நிதி அமைச்சகம் அம்ற்றும் தொழிலதிபர்களின் கண்டனத்தையும் மீறி, விலைவாசியை கட்டுப்படுத்த விலைஏற்றம் அவசியம் எனக் கூறினார். ஜனவரி 2016 வட்டி விகிதத்தை படிப்படியாக குறைத்து 6.25% ஆக குறைத்துள்ளார்.
எனினும் மத்திய அரசின் கொள்கைகளை நடுநிலைமையுடன் விமர்சித்து வருவதாலும், அருண் ஜெட்லியிடம் மண்டியிடாததாலும் இவருக்கு பணி நீட்டிப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.