2-ஆம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Must read

சென்னை:
ரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு, இன்று முதல் இணையவழியாக விண்ணபிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக்காவல்படைகளில் உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கும், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கும் இந்தாண்டு நேரடி தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும் இத்தேர்வில் பங்கேற்க விரும்புபவர்களுக்காக இன்று முதல், அனைத்து மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் உதவி மையம் செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article