சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த  வரும்படி, காங்கிரஸ்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக மீண்டும் அழைப்பு டிவிடுத்துள்ளது. அதன்படி, இன்றுக்குள் பேச்சு வார்த்தையை சுமூகமாக முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை தோழமை கட்சிகளுடன் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து பேசி வருகிறது. ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தையின்போது,  தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் அதிருப்தி நிலவியது. இதனால், உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. இதையடுத்து, இன்று மாலை 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு திமுக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது 41 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகள் தான் தரமுடியும் எனக் கூறிய திமுக, இப்போது 22 வரை வழங்க முன்வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய பேச்சுவார்த்தையின்போது, உடன்பாடு எட்டப்படும் என நம்பப்படுகிறது.