சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி,  தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  திமுக – தமிழ் மாநில காங்கிரஸ் இடையேயான முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை பட்டிணப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, தமாகா தரப்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில் 12 இடங்கள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்,அதை ஏற்க அதிமுக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று அதிமுக தமாக இடையே 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில், அதிகபட்சமாக தமாகாவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு  இருப்பதாக கூறப்படுகிறது.