சென்னை

எஸ் டி  பி ஐ கட்சி தமிழக முதல்வரின் மாநில சுயாட்சி முன்னெடுப்பை வரவேற்றுள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய பா.ஜ.க. ஆட்சியில், மாநிலங்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சி பறிக்கப்பட்டு, கூட்டாட்சி தத்துவம் பலவீனப்படுத்தப்பட்டு வரும் சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை வலியுறுத்தி, மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சியாகும்.

கூட்டாட்சி தத்துவம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் இச்சூழலில், தமிழக முதல்-அமைச்சரின் இந்த முன்னெடுப்பு இந்தியாவிலேயே முன்மாதிரி நடவடிக்கையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளை வலுப்படுத்தவும், மாநிலங்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சியைப் பாதுகாக்கவும் இந்த முயற்சி முக்கிய பங்காற்றும் என நம்புகிறோம்.

இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழக முதல்வரின் இத்தகைய முன்னெடுப்பை மனதார வரவேற்கிறது.”

என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.