சென்னை
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி மற்றும் அதிமுக – பாஜக கூட்டணி களத்தில் இறங்கி உள்ளன. இரு கட்சிகளிலும் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாம் அணி உருவாகி வருகிறது. இந்த கட்சியுடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் ஐஜேகே ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இவ்விரு கட்சிகளுக்கும் கூட்டணியில் தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் எஸ் டி பி ஐ என அழைக்கப்படும் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெற்லான் பாக்வி மற்றும் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.