சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவர் வாழ்ந்த வீடான போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம். அமைச்சர்கள், அதிமுக தொண்டர்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு நடுவில் ஊர்ந்து சென்றது
1
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்போலோ மருத்துவமனையில் இருந்த அவரது உடல் அவர் வாழ்ந்த வீடான போயஸ் கார்டனுக்கு வாகனத்தில் உரிய மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, அப்போலோ வாசலில் இருந்து போயஸ் கார்டன் வரை சாலையின் இருமருங்கிலும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி தங்கள் தலைவியின் உடல் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்தனர்.
2
ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தங்கள் தலைவரின் முகத்தை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். கட்டுக்கடங்காமல் போன அதிமுக தொண்டர்களை லேசான தடியடி செய்து போலீசார் கலைத்தனர். இதனையடுத்து, போலீசார் அராஜகம் ஒழிக என்று அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள். பின்னர், சற்று நேரத்தில் மீண்டும் அங்கு அமைதி திரும்பியது.
தற்போது ஜெயலலிதாவின் உடல், அவரது போயஸ் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.