சென்னை:

மிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை ஜெ. பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி மாலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில்  நடைபெற உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிதாவின் பிறந்தநபாள்  விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தின் மூலம்  தமிழக அரசு சார்பில் இருசக்கர வாகனம் பெற ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50% இவற்றில் எது குறைவோ அது வழங்கப்பட உள்ளது.

இதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடியின் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி வரும் 24ந்தேதி காலை குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் 3.15 மணிக்கு புறப்படும் பிரதமர் மோடி,  மாலை 5.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

அவரை தமிழக கவர்னர், முதல்வர், தலைமை செயலாளர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்து  5.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, மாலை 5.45 மணிக்கு ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்தடைகிறார். பின்னர். அங்கிருந்து மாலை 5.50 மணி அளவில் சாலை மார்க்கமாக புறப்பட்டு, மாலை 6 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்கு வருகிறார்.

அங்கு நடைபெறும் ஜெ. பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர்,  மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிறார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெ. உருவ சிலையை திறந்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மோடி சிறப்புரையாற்றுகிறார்.

பின்னர் மாலை  6.35 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு  கிண்டியில் உள்ள ராஜ் பவன் சென்றடைகிறார். அங்கேயே இரவு தங்குகிறார்.

அடுத்த நாளான 25–ந்தேதி காலை 9.40 மணிக்கு ராஜ் பவனில் இருந்து புறப்படும் மோடி,  சாலை மார்க்கமாக   சென்னை விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து,  விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் காலை 10 மணிக்கு புறப்பட்டு, காலை 10.40 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் சென்றடைகிறார்.

காலை 11.35 மணி அளவில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து சாலை மார்க்கமாக விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அறக்கட்டளைக்கு பிற்பகல் 12 மணிக்கு செல்கிறார்.

பிற்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் ஆரோவில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். மதியம் 2.05 மணிக்கு ஆரோவில் அறக்கட்டளையில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு, மதியம் 2.30 மணி அளவில் புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானம் சென்றடைகிறார்.

பின்னர் 3.35 மணிக்கு லாஸ்பேட்டை மைதானத்தில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு 3.40 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் சென்றடைகிறார். புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, மாலை 4.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.50 மணிக்கு சூரத் விமான நிலையம் சென்றடைகிறார்.

இவ்வாறு பிரதமரின் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.