திருவனந்தபுரம்

வம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் முதலே நாடெங்கும் கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  இடையில் ஓரிரு இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.   கொரோனா இரண்டாம் அலை பரவல் அச்சத்தால்  ஏப்ரல் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.  இதில் கேரள மாநிலமும் ஒன்றாகும்.   தற்போது கேரள மாநிலத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.   இந்நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட கொரோனா ஆய்வுக் கூட்டம் நடந்தது.   

இந்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த கூட்டத்தில்  நவம்பர் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நவம்பர் 1 முதல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.   வரும் வருடம் பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாகவும் நவம்பர் 15ஆம் தேதி முதல் மற்ற வகுப்புக்கள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவ நிபுணர்கள்: பள்ளிகள் திறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.  சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து பள்ளிகளைத் திறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  மாணவர்களுக்குச் சிறப்பு முகக் கவசங்கள் வழங்கவும் அவற்றை போதுமான அளவு சேமித்துக் கொள்ளவும் முதல்வர் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவு இட்டுள்ளார்.