சென்னை:
ள்ளிகள் இணையம் மூலம்  வகுப்புகளை நடத்தக்கூடாது எனவும், மீறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறப்பது எப்போது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் பல தனியார் பள்ளிகள், இணையவழிக் கல்வி மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது எனவும், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்புக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.