சென்னை: தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் 2020ம் ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் மூடப்பட்டன. 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்க பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று முதல் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் முதல்வர் வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.