சென்னை: தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் தீவிரமாகி உள்ளதால், பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டு  மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்தலாமா என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்து நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில், கடந்த ஒரு வாரத்தில் சுமார் 250 பேருக்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் ஒமிக்ரான் தொற்று பரவலும் தீவிரமாகி வருகிறது. இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்தியஅரசு வலியுறுத்தி வருகிறது. மருத்துவ நிபுணர்களும், பள்ளி, கல்லூரிகளை மூடி ஆன்லைன் வகுப்பை தொடருங்கள் என தமிழகஅரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது. பாமக உள்பட சில அரசியல் கட்சிகளும், பள்ளிகளை மூட வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நாளை (31ந்தேதி) மருத்துவ நிபுணர்கள், மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்து கிறார். இந்த கூட்டத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பை தொடரலாமா என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.