சென்னை:
கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே காரணமாக, மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.