திருவனந்தபுரம்
கனம்ழை காரணமாக கேரளாவில் 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே நேற்று (24ம் தேதி) தொடங்கிவிட்டது. இதன் மூலம் 16 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இந்த கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக கேரளாவில் 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26ம் தேதி – திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, திரிச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு, காரச்கோடு ஆகிய 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.