சென்னை:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் சொத்து விவரங்களை தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை பட்டியலிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஊழல் கண்காணிப்பு துறை அறிவுறுத்தலின்படி, சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.