சென்னை,

மிழகத்தில் தற்போது அரசு சார்பாக கொண்டாடப்பட்ட வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச்செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறது.

இதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச்செல்ல தடை விதித்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கும் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த,’ பாடம்’ நாராயணன் என்பவர், அரசு விழாக்கள் மற்றும் தற்போது மாவட்டம் தோறும் கொண்டாடப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவ மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்து செல்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு மாணவ, மாணவியரை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

மேலும்,  அரசின்  இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்று கொள்ள முடியாது பள்ளி மாணவர்களை .பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது முறையான செயல் அல்ல. இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் பள்ளி  குழந்தைகள் பங்கேற்க  அரசு அனுமதி தரக்கூடாது.

இவ்வாறு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைத்தது.

ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு காரணமாக  சேலத்தில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ மாணவியரை அழைத்து செல்லமுடியாது  என்பது குறிப்பிடத்தக்கது.