பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் நடத்தும் பள்ளியில், பள்ளி மாணவர்களிடையே மத துவேஷத்தை உருவாக்கும் வகையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வீடியோ போட்டு காண்பிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மத நல்லிணக்கத்துக்கு உலை வைக்கும் வகையிலான தேசிய குடிமை பதிவேடு, புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் கொண்டு வந்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நேற்று டெல்லியிலும் வன்முறை வெடித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லட்க பிரபாகர் பட் (kalladka Prabhakar Bhat) என்பவரின் பள்ளியில் அனைத்து மத மாணவர்களும் படித்து வரும் நிலையில், மாணவர்களிடையே, மத துவேஷத்தை பரபப்பும் வகை யிலும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையிலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை வெளியிட்டு காண்பித்துள்ளது.

அந்த வீடியோவில் , மசூதி நொறுங்கி விழுவதும், அதன்பின்பு அந்த இடத்தில், மாணவர்கள்  ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி ஆடுவதுமாக உள்ளது. பின்னர், அந்த இடத்தில் வண்ண விலக்குகளால், ராமர்கோவில் அமைக்கப்படுவது போல உள்ளது.

பள்ளி மாணவர்களைக்கொண்டே பாபர் மசூதி போல உருவாக்கப்பட்டு,பின்னர் அது உடைந்து நொறுங்குவது போலவும், அதே இடத்தில் ராமர் கோவில் போல அமைப்பும் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், பாஜக மத்திய அமைச்சர் சதானந்த் கவுடா மற்றும் பல மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  இவர்களுடன்  தலைமை விருந்தினராக  பாண்டிச்சேரி கவர்னர்   கிரண் பேடியும் கலந்துகொண்டார்.

பள்ளி மாணவர்களிடையே வேறுபாட்டை வளர்க்கும் வகையிலும், மாணவர்களிடையே இந்து முஸ்லிம் வேறுபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும்  பள்ளி நிர்வாகம் செய்துள்ள இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள்  ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்த பள்ளியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மாணவர்களிடையே மதவெறுப்பை வளர்க்கும் இந்த பள்ளிக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.