கோபி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, முதல்வரின் நிவாரண நிதிக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன்.
அவர் கூறியுள்ளதாவது; கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித் துறை சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.70 கோடி வழங்கப்படும்.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் பங்களிப்பில், ஒரு நாள் சம்பளம் நிதியாக வழங்கப்படும். 10ம் வகுப்பு மாணவர்களுக்காக, யூடியூப் மூலம் செயல் திட்டங்கள் வகுத்து நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இதை மாணாக்கர்கள், மொபைல் போன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக வீட்டில் இருந்தே கற்கலாம். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித் துறை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஊரடங்கு உத்தரவை தளர்த்தியப் பின், முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்” என்றார் அமைச்சர்.