சென்னை,
வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால், நாளை முதல் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என தமிழக கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அறிவித்து உள்ளார்.
வார்தா புயல் சென்னை அருகே கடந்த 12ந்தேதி கரையை கடந்தது. அதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 12–ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது.
வார்தா புயல் நேற்று முன்தினம் சென்னையில் கரையை கடந்தபோது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்று பலமாக வீசியதால் ஏராளமான மரங்கள் சாலைகளில் விழுந்தன. மின் கம்பங்கள் பல அடியோடு சாய்ந்தன.
இவற்றை சரிசெய்வதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை.இதன் காரணமாக, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்றும் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
தற்போது ஓரளவு இயல்புநிலை திரும்பியுள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.