காஞ்சிபுரம்: அரசு பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு வெறும் மூன்று மாதமே ஆன நிலையில், சிலிக்கில் இருந்து சிமெண்டுகள் பெயர்ந்து விழுந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்துஆசிரியர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பதாக அவசரம் அவசரமாக திறக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடம், சுமார் ரூ.61 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் மூன்று புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது.
இந்த நிலையில், புதிய கட்டடத்தின் வகுப்பறையில் மேலே உள்ள சீலிங் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென உடைந்து கீழே விழுந்தது. அப்போது வகுப்பையில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கை வளைந்துள்ளது. இந்த சமயத்தில், வகுப்பறையில் இருந்த குழந்தைகள், காலை பிரேயருக்காக மைதானத்திற்கு சென்றிருந்ததால், அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை அளித்தது.,.
இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் உடனே கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் விரைந்து வந்து பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்களும் அங்கு கூடி, அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பின்னர் ஆட்சியை சந்தித்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, தரமற்ற முறையில் இந்த கட்டடம் கட்டப்பட்டிருந்தால் இடித்துவிட்டு தரமான முறையில் மீண்டும் புதிய கட்டடத்தை கட்டித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி கட்டிடத்தின் சீலிங் சுவர் 3 மாதத்தில் பெயர்ந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]