செங்கல்பட்டு: பள்ளிக்கூட நேரங்களில் போதுமான அளவுக்கு அரசு பேருந்துகள் இல்லாததால், பயணிகள் கூட்டம் காரணமாக, அரசு பேருந்து படியில் பயணம் செய்து வந்த மாணவன், பேருந்து போய்க்கொண்டிருக்கும்போது கூட்ட நெரிசல் காரணமாக தவறி சாலையில் விழுந்தான்.

அந்த நேரத்தில் பின்னால் ஏதும் வாகனங்கள் வராததால், அந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து அச்சரப்பாக்கம் வரை செல்லும் அரசு பேருந்தில் பயணிகள் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பள்ளி மாணவர்கள் சிலர் படியில் தொங்கியபடி சென்றனர். அப்போது படியில் நின்றிருந்த தனியார் பள்ளி மாணவன் ஒருவன் கூட்ட நெரிசலில் நிலை தடுமாறி கீழே விழுந்தான். சாலையில் விழுந்த மாணவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினான். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் வராததால், அந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இகுறித்து கூறிய அந்த பகுதி மக்கள், தங்கள் பகுதியில், போதுமான பேருந்துகள் இயக்க அரசு மறுத்து வருவதாகவும், இதுதொடர்பாக பல முறை மனு அளித்தும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற குற்றம் சாட்டியதுடன், தற்போது, அந்த வழிதடத்தில் காலை மற்றும் மாலை வேளையில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், அதில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் மேற்காள்ள வேண்டியது உள்ளது என்றவர்கள்,  இனிமேலாவது, இந்த வழிதடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.