சென்னை:
சென்னை உள்ளிட்ட  9 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதாவது தென்கிழக்கு வங்கக் கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்கக்கூடும். இதன் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் கன மழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை பெய்து வருகிறது