நெட்டிசன்:
“தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் மேற்படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு தொழிலாளர் நல வாரியத்தில் மனு அளிக்க வேண்டும். ஆனால் கடந்த ஒருவடமாக மதுரை தொழிலாளர் நல வாரியத்தில் இந்தத்தொகை அளிக்கப்படவில்லை.
labour
இது குறித்து தொழிலாளர் நல வாரிய அலுவலர்களிடம் கேட்டால், “அரசிடமிருந்து நிதி வரவில்லை” என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொள்கிறார்கள். இல்லாவிட்டால், “உயர் அதிகாரிகளிடம் போய் கேளுங்கள்” என்று முகத்திலறைந்த மாதிரி பேசுகிறார்கள்.
venkatesan
அதே போல, வயது முதிர்ந்த தொழிலாளிகளுக்கு ஓய்வூதியமும் அளிக்கப்படவில்லை. உடலுழைப்பை அளிக்க முடியாத முதிய தொழிலாளிகள் இதனால் தவித்துப்போய் நிற்கிறார்கள்.
மதுரை மட்டுமில்லை.. தமிழகம் முழுதும் இதே நிலைதான். இதனால் பூ கட்டுபவர்கள் உட்பட அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு எப்போது தீர்வு ஏற்படும்? தொழிலாளர் நல வாரியத்தில் வேலையே பார்க்காமல் சம்பளம் வாங்கும் ஊழியர், அதிகாரிகளை வேலை செய்ய வைக்க உயர் அதிகாரிகள் முன்வருவார்களா? அல்லது முதல்வர் திரும்பி வந்த பிறகுதான் இது நடக்குமா?
திமுக ஆட்சியின் போது பல்வேறு போராட்டங்களை நடத்திய கம்யூனிஸ்டுகள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்ற சுவடே தெரியவில்லை! “