டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் இடைக்கலத் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறாக விமர்சனம் செய்தத தொடர்பாக ஊடவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுமீது உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பிரபல தொலைக்காட்சி ஊடகமான ரிபப்ளிக் டிவியில், மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத் தில் இந்து துறவிகள், கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது, விவாதம் நடத்திய நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, இந்த படுகொலையை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியவர், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் அள்ளி வீசினார்.
இதையடுத்து, அர்னாப் கோஸ்வாமி மீது, மும்பை காங்கிரசார் காவல்துறையினர் புகார் அளித்த னர். இதையடுத்து , மும்பை காவல் துறை அவர் மீது கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கை எதிர்த்து அர்னாப் தாக்கல் செய்த மனுவில், அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தன்மீது மும்பையிலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி அர்னாப் கோஸ்வாமி உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீது விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.