டில்லி

த்மாவத் இந்தி திரைப்படத்தினால் சட்ட ஒழுங்கு கெடும் என்ற வாதத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

பத்மாவத் இந்தித் திரைப்படம் ராஜஸ்தான் ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி நான்கு மாநிலங்கள் அந்தப் படம் வெளியாக தடை விதித்தது.   அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த தடை செல்லாது எனவும் எந்த மாநிலமும் அந்தத் திரைப்படத்தை தடை செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

அதனால் உச்ச நீதிமன்றத்தில் அவசர விசாரணைக்கு ஒரு பொது நல மனு அளிக்கப்பட்டது.  அந்த மனுவில் பத்மாவத் திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது எனவும் அதனால் அந்தப் படத்துக்கு தணிக்கைக் குழுவினர் அளித்த சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டது.

அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோரின் கீழ் உள்ள அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.   அந்த மனுவை விசாரித்த அமர்வு தணிக்கை சான்றிதழை திரும்பப் பெற முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  மேலும்  சட்ட ஒழுங்கை பாதுகாப்பது மாநிலங்களின் கடமை என்றும்  அது உச்சநீதிமன்றத்தின் வேலை இல்லை எனவும் தீர்ப்பில் கூறி உள்ளது.