டில்லி
உச்சநீதிமன்றம் கேரள நடிகை பாலியல் வழக்கு விசாரணையை 8 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

பிரபல கேரள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றபோது சில நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் முக்கிய குற்றவாளியாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை ஜூலை 31 ஆம்-தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு மேலும் அவகாசம் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த மனுவை ஏற்று, 8 மாதங்களில் விசாரணையை முடிக்க அவகாசம் வழங்கி உத்தரவு இட்டுள்ளது.
[youtube-feed feed=1]