டில்லி
டில்லியில் முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது.
டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
டில்லி உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை கைதுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. நேற்று 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் கெஜ்ரிவாலின் வீட்டில் சோதனை நடத்தினர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை நேற்று இரவு கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதை எதிர்த்து கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர். அங்குக் கலவரம் பரவாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.
டில்லி முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது செயப்பட்ட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் ஆம் ஆத்மி முடிவு செய்து அதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியது. அமைச்சர் அதிஷி அமலாக்க அதிகாரிகளின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, அதனை அதனை சட்டப்படி செல்லாதது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இன்றிரவே அவசர வழக்காக இதனை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளளாதாகவ்ம் நேற்று கூறினார்.
நேற்றிரவு கெஜ்ரிவாலின் மனுவை விசாரிக்க என்று தனியாகச் சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு எதுவும் நேற்றிரவு அமைக்கப்படவில்லை. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனப் பார்க்கப்படுகிறது. அதே வேளையில் உச்சநீதிமன்றத்தில் இன்று பட்டியலிடப்பட்ட வழக்கு விசாரணையில் கெஜ்ரிவாலின் மனு இடம் பெறவில்லை என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ஆம் ஆத்மியை சேர்ந்த டில்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.