டில்லி

ச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரிவுபசார விழாக்களை புறக்கணித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் செல்லமேஸ்வரும் ஒருவர் ஆவார்.   இவரது தலைமையில் வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்கல் சந்திப்பை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.   நீதிபதி செல்லமேஸ்வரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தற்போது உச்சநீதிமன்ரத்துக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது.   அதனால் டில்லி வழக்கறிஞர் சங்கம் நாளை செல்லமேஸ்வருக்கு ஒரு பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தது.   ஆனால் அந்த விழாவில் கலந்துக்கொள்ள செல்லமேஸ்வர் மறுத்து விட்டார்.   இதற்கு முன்பு ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவுபசார விழாவிலும் இவர் கலந்துக் கொள்ள மறுத்துள்ளார்.