ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர வாருங்கள்! அழைப்பு விடுத்த பாஜக செயலாளர்!

Must read

கவுகாத்தி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர அழைப்பு விடுத்த பாஜக செயலாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி அருகே இருக்கிறது நல்பாரி பகுதி. இங்கு ஏராளமான கட்டிடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடிகளும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது பொதுமக்களையும் காவல்துறையினரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

ஐ.எஸ். பயங்கரவாதிகள்தான் இதுபோன்று விளம்பர அழைப்பு விடுத்திருக்கின்றனர் என்று காவல்துறையினர் நினைத்தனர். உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

ஆனால் விசாரணையில் இந்த விளம்பர அழைப்புகளை எழுதியவர்கள் அப்பகுதியின் பா.ஜ.க. மாவட்ட  செயலாளர் தபான் பர்மான் தலைமையிலான அறுவர் குழு என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் தாங்கள்தான் அந்த வாசகங்களை எழுதியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மக்களிடையே பிரச்சனையை உண்டாக்கி கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் அவர்கள் இப்படி செய்து இருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More articles

Latest article