டில்லி

மிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன விவகாரம் தொடர்பாக புதிய வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மருத்துள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய டில்லி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

நீதிபதி அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் 40 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விளம்பர நோக்கத்திற்காகத் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகள் இதைப் பதிவு செய்து இந்த மனு தொடர்பாகப் பதிலளிக்க டில்லி காவல் ஆணையருக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்ப மறுப்பு தெரிவித்தனர். அத்துடன் சனாதன விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் இந்த புதிய மனுவையும் இணைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.