அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்ட 2 உச்சநீதிமன்ற அதிகாரிகள் பணி நீக்கம்

டில்லி

ரண்டு உச்சநீதிமன்ற அதிகாரிகள் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்க வேண்டிய தொகையில் ரூ. 550 கோடி உடனடியாக செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அந்நிறுவனம் செலுத்தாததால் எரிக்சன் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையிட்டு வழக்கில் மேலும் காலக்கெடு அளித்து அதற்குள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. .

இந்த காலக்கெடுவுக்குப் பிறகும் ரிலையன்ஸ் நிறுவனம் தொகையை அளிக்காததால் எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இது குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் ”குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்துக்கு நேரடியாக வருவதை தவிர்க்கலாம்” என்னும் பொருளில் ஆங்கில வாசகம் அமைந்துள்ளது.

இதை உச்சநீதிமன்ற அதிகாரிகளான மானவ் சர்மா மற்றும் தபன் குமார் ஆகியோர் உச்சநீதிமன்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் அவசியம் ஆஜராக வேண்டும். இதை எரிக்சன் தரப்பில் எடுத்துக் காட்டப்பட்டது. இந்த கவனித்த உச்சநீதிமன்றம் உடனடியாக இதை திருத்தி, “குற்றம் சாட்டப்படவர் நீதிமன்றத்துக்கு வருவதை தவிர்க்க கூடாது” என மாற்றினர்.

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை சேர்க்காததால் எதிர்மறை பொருளை இந்த உத்தரவு முதலில் அளித்துள்ளது. இதை ஒட்டி மானவ் சர்மா மற்றும் தபன் குமார் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட இரு அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தில் பதிவாளர் பணியில் இருந்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Anil ambani, contempt to court, Court order, mistake by officials, sc officials dismissed, அதிகாரிகள் பணி நீக்கம், அனில் அம்பானி, உச்சநீதிமன்ற உத்தரவு, உச்சநீதிமன்ற தீர்ப்பு, எழுத்துப் பிழை
-=-