டில்லி

ன்று உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் 6 பெண் வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் 37 பேரை மூத்த வழக்கறிஞர்களாக பதவி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆறு பேர் பெண் வழக்கறிஞர்கள் ஆவார்கள்.

1. மாதவி கரோடியா திவான்
2. அனிதா ஷெனாய்
3. அபராஜிதா சிங்
4. மேனகா குருசாமி
5. ஐஸ்வர்யா பாடி
6. பிரியா ஹிங்க்ரோணி.

மாதவி திவான் தற்போது உச்சநீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக உள்ளார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவியை வரும் 2020 ஜூன் 30 வரை வகிப்பார். இவர் தனது சட்டத்துறை பட்டப்படிப்பை இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள பெம்புரோக் கல்லூரியில் படித்தார். மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கிய இவர் குஜராத்,மத்தியப்பிரதேச அரசுகள் சார்பில் வழக்காடி உள்ளார்.

அனிதா ஷெனாய் கடந்த 1995 ஆம் வருடம் தேசிய சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவர் கர்நாடகா அர்சின் உச்சநீதிமன்ற வழக்குகளை வெகு நாட்களாக கவனித்து வருகிறார்.

மேனகா குருசாமி தேசிய சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பி எச் டி படிப்பை முடித்துள்ளார். ஐநா சபையில் மனித உரிமை ஆலோசகராகவும் நியூயார்க் சட்டக் கல்லூரியில் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். இவர் நவ்தேஜ் ஜோகர் ஓரின வழக்கு, மணிப்பூர் கொலை உள்ள்ட்ட பல புகழ்பெற்ற வழக்குகளில் வழக்காடி உள்ளார். ஆக்ச்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் இவருடைய படம் இடம் பெற்றுள்ளது பெருமைக்குறிய விஷயமாகும்.

ஐஸ்வர்யா பாடி உத்திரப் பிரதேச அரசின் சார்பில் 2017 ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் தனக்கு இந்த பதவி கிடைத்ததன் மூலம் தனது கனவு நிறைவேறி உள்ளதாக கூறி உள்ளர். அவர் இந்த பதவியுடன் தனக்கு மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துளார்.

பிரியா ஹிங்க்ரோணி டில்லி பார் கவுன்சிலில் 1990 ஆம் வருடம் தன்னை வழக்கறிஞராக பதிந்துக் கொண்டவர் ஆவார். அவர் உச்சநீதிமன்றம், டில்லி, கொல்கத்தா, ஒரிசா, மும்பை, ஜார்கண்ட், பீகார், உத்தரகாண்ட், காஷ்மீர், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றங்களில் பல வழக்குகளில் வாதாடியுள்ளார். சட்டத்தின் பல துறைகளை உள்ளடக்கிய பல வழக்குகளை இவர் திறமையாக கையாண்டுள்ளார்.

அபராஜிதா சிங் முதலில் ஹரிஷ் சால்வே மற்றும் லலிட் ஆகிய மூத்த வழக்கறிஞர்களிடம் ஜூனியராக இருந்தவர் ஆவார். அதன் பிறகு சொந்தமாக வாதாட தொடங்கினார். இவர் உச்சநீதிமன்றத்துக்கு பல வழக்குகளில் சட்ட ஆலோசகராக பணி புரிந்துள்ளர். அத்துடன் ஆதரவற்ற விதவைகள் மறுவாழ்வு திட்டங்கள் அமைப்புக் குழுவிலும் பங்கு பெற்றுள்ளார்.