டெல்லி

பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது/

கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார்.  இவர், நடிகையும், தர்ஷனின் தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி இருந்தார். எனவே ரேணுகாசாமியை கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி நடிகர் தர்ஷன், தனது கூட்டாளிகள் மூலம் கடத்தி வந்து படுகொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கடந்த ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்டனர்.  பிறகு, கைது செய்யப்பட்ட பலருக்கும் ஜாமீன் வழங்கப்பட்ட வகையில் இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 7 பேருக்கு டிசம்பர் 13ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நடிகர் தர்ஷன் உள்பட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது   இன்று இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றடு மறுத்துள்ளது.