டெல்லி

க்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா ஆய்வுக் குழ்வில் இருந்து எதிர்க்கட்சி எம்  பி க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக, வக்பு சட்டம்-1995ல் திருத்தங்கள் செய்வது மத்திய அரசின் மசோதாவின் நோக்கமாகும்   இந்த வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களைப் படிக்க போதுமான நேரம் வழங்காமல் அவசர கதியில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டி யவருகின்றன.

இன்று நடைபெற்ற வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலைக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பாலுக்கு எதிராக தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், ஆ. ராசா, அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், மொஹிபுல்லா, முகமது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் கூட்டுக்குழுவில் இருந்து இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திடீரென திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் நசீர் உசேன் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளியேறி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டுக் குழுவின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினர். வரைவு மசோதாவில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை உட்பிரிவு வாரியாக ஆராய்வதற்காக ஜனவரி 27-ம் தேதி திட்டமிடப்பட்ட கூட்டத்தை ஜனவரி 30 அல்லது ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.