டில்லி:

லதார மணம் (பல பெண்களை திருமணம் செய்து கொள்வது) அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா என்பது குறித்து விசாரிக்க உச்சநீதி மன்ற அமர்வு முடிவு செய்துள்ளது.

இஸ்லாமியர்களில் ஒருவர் பல பெண்களை மணந்துகொள்வது, அவர்களது ஷரியத் சட்டம்படி சரி என்று கூறப்படுகிறது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பல தார மணத்திற்கு ஆதரவு தெரிவித்து  உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆண் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொள்ளலாம் என்று இஸ்லாமியச் சட்டத்தில் உள்ளதாகவும், இதேபோல் ஒரு பெண் பல ஆண்களை மணந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும்,  வாழ்க்கையின் உரிமையை மீறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமிய ஷரியத்  சட்டத்தில்  வழங்கப்பட்டுள்ள ஆண்களுக்கு பலதார மணம் குறித்து, இந்திய  அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா என்பது குறித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ஏஎம்.கன்வில்கர், டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தலாக் முறைக்கு எதிரான வழக்கு உச்சநீதி மன்ற அரசியல் சாசன பெஞ்சு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.