டில்லி

ன்கொடுமை எதிர்ப்புச் சட்ட திருத்தத்துக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

வன்கொடும எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று தீர்ப்பு ஒன்றை வழங்கியது.   அதில், “பெரும்பாலான சமயங்களில் வன்கொடுமைச் சட்டம் பழிவாங்கவே பயன்படுத்தப் படுகிறது.   அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக சட்டத்தின் சில அம்சங்கள் மாற்றப் படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் புகார் செய்யப்பட்டோரை  முன் விசாரணை நடத்திய பின்னரே கைது செய்ய வேண்டும்.   மேலும் இந்த சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டால் முன் ஜாமீன் வழங்கலாம்” என குறிப்பிடப் பட்டது.   இந்த சட்ட திருத்தம் தலித்துகளின் உரிமையை பறிப்பதாக நாடெங்கும் போராட்டங்கள் எழுந்தன.   சில மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்துக்கு அளித்துள்ளனர்.

இது குறித்து உச்சநீதிமன்றம் சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் , “மறு ஆய்வு மனுக்கள் அவசியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  அதே நேரத்தில் இந்த  திருத்தம் வன் கொடுமை எதிர்ப்பு சட்டத்துக்கு எதிரானது அல்ல.   இது குறித்து தெருவில் இறங்கி போராடுபவர்கள் இந்த தீர்ப்பை சரியாக படிக்கவில்லை என தோன்றுகிறது.

நாங்கள் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டோருக்காக மட்டுமே திருத்தத்தை மேற்கொண்டோம்.    குற்றமற்றவர்கள் விசாரணை இன்றி கைது நடவடிக்கைகளுக்கு உள்ளாவதை தடுக்க நினைக்கிறோம்.  நாங்கள் ஒரு போதும் இந்த சட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல”  எனத் தெரிவித்துள்ளார்