டில்லி

ரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களான வோடபோன், ஏர்டெல், மற்றும் டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் உரிமக் கட்டணம், வரி, மற்றும் அலைக்கற்றைக் கட்டணம் ஆகிய்வைகளை அரசுக்கு செலுத்தாமல் இருந்தது.   இவ்வகையில் இந்நிறுவனங்கள் அரசுக்கு ரூ.2447 கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தது.  இந்த மதிப்பீட்டை நிறுவனங்கள் ஏற்கவில்லை.

தங்களுடைய கணக்கிட்டின்படி மிகவும் குறைவான தொகை மட்டுமே செலுத்த வேண்டி உல்ள்தாக வழக்கு தொடந்தன.   இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சரி செய்யப்பட்ட மொத்த வருவாயின்படி 16 தொலை தொடர்பு நிறுவனங்களும் வரி மற்றும் அபராதம் உட்பட  ரூ.1,69,000 கோடி செலுத்த வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

இந்ததொகையை தவணை முறையில் பெற அனுமதி அளிக்க கோரி தொஅகி தொட்ர்பு துறை மனு தாக்கல் செய்தது.  அதே வேளையில் இந்த தொகையை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என தொலை தொடர்பு நிறுவனங்களன ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்துக்கு மனு அளித்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா மறும் ஷாவின் அமர்வு முந்தைய தீர்ப்பை மாற்ற முடியாது எனவும்  நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை மறு மதிப்பீடு செய்வது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளது.  அத்துடன் நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் நிறுவன இயக்குநர்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.